15 October 2018

நீர் தந்த நாளும் ஓய்ந்ததே


The day Thou gavest Lord is ended
St.       Clement

38                                                         L.M.

1.         நீர் தந்த நாளும் ஓய்ந்ததே
            கர்த்தாவே ராவும் வந்ததே;
            பகலில் உம்மைப் போற்றினோம்.
            துதித்து இளைப்பாறுவோம்.

2.         பகலோன் ஜோதி தோன்றவே
            உம் சபை ஒய்வில்லாமலே
            பூவெங்கும் பகல் ராவிலும்
            தூங்காமல் உம்மைப்போற்றிடும்.

3.         நாற்றிசையும் பூகோளத்தில்
            ஓர் நாளின் அதிகாலையில்
            துடங்கும் ஜெபம் ஸ்தோத்திரமே
            ஓர் நேரம் ஓய்வில்லாததே.

4.         கீழ்கோளத்தோர் இளைப்பாற,
            மேல்கோளத்தோர் எழும்பிட,
            உம் துதி சதா நேரமும்
            பல்கோடி நாவால் எழும்பும்.

5.         ஆம், என்றும் ஆண்டவரே நீர்,
            மாறாமல் ஆட்சி செய்குவீர்;
            உம் ராஜ்யம் என்றும் ஓங்கிடும்
            சமஸ்த சிருஷ்டி சேர்ந்திடும்.  

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...