06 October 2018

சபையாரே கூடிப் பாடி


82. Regent Square,                                                    8, 7, 8, 7, 4, 7

"Lasset uns den Herren preisen"

1.         சபையாரே, கூடிப் பாடி,
                        கர்த்தரை நாம் போற்றுவோம்;
            பூரிப்பாய் மகிழ் கொண்டாடி,
                        களிகூரக்கடவோம்.
                                    யேசு க்றிஸ்து
            சாவை வென்று எழுந்தார்

2.         சிலுவையில் ஜீவன் விட்டு,
                        பின்பு கல்லறையிலே
            தாழ்மையாக வைக்கப்பட்டு
                        மூன்றாம் நாள் எழுந்தாரே;
                                    லோக மீட்பர்,
            வெற்றி வேந்தர் ஆனாரே.

3.         மீட்பரே, நீர் மாட்சியாக
                        ஜீவனோடெழுந்ததால்
            நாங்கள் நீதிமான்களாக
                        கர்த்தர் முன்னே நிற்பதால்
                                    என்றென்றைக்கும்
            உமக்கே மா ஸ்தோத்திரம்!

4.         சாவின் ஜெயம் ஜெயமல்ல,
                        தேகம் மண்ணாய்ப் போயினும்
            எல்லாம் கீழ்ப்படுத்த வல்ல
                        கர்த்தர் அதை மீளவும்
                                    ஜீவிப்பித்து
            மறுரூப மாக்குவார்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...