06 October 2018

தேவ மைந்தனானவர்


83. St. Midred; Harts, Cyprus,                                              7,

"Nun is tauferstanden"

1.         தேவ மைந்தனானவர்,
            இயேசு என்னும் ரட்சகர்,
            திவ்ய சத்துவத்தினால்
            கல்லறையை விட்டதால்.

2.         சாபம், துன்பம் யாவையும்
            நீக்கி, சுகவாழ்வையும்
            மாந்தர்க்கீந்து ரட்சித்தார்;
            வெற்றி வேந்தர் ஆயினார்.

3.         ஆதலால் இந்நன்மையை
            ஈந்த, உங்கள் மீட்பரை
            வாஞ்சையோடு நாடுங்கள்
            ஏற்றுக்கொண்டு பாடுங்கள்.

4.         யேசு உம்தன் ஆவியை
            ஈந்து, திவ்ய ரட்சிப்பை
            எங்குமுள்ள மாந்தரும்
            காண நீர் கடாட்சியும்.

5.         ஆண்டவர்க்கு ஸ்தோத்திரம்!
            அல்லேலூயா! கீர்த்தனம்!
            மீட்கப்பட்ட கூட்டத்தார்
            என்றும் உம்மை வாழ்த்துவார்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...