06 October 2018

இந்நாளே கிறிஸ்து வெற்றியை


81. Church triumphant,                                               8, 8, 8, 8, 4

"Erschienen ist der herrlich Tag"

1.         இந்நாளே க்றிஸ்து வெற்றியை
            அடைந்து, தம் பகைஞரை
            சிறைப்பிடித்துக் கொண்டுபோம்
            ஜெயநாள் என்று பாடுவோம்
                        அல்லேலூயா!

2.         பிசாசு, பாவம், நரகம்
            எக்கேடும் இன்றையத்தினம்
            எழுந்த கிறிஸ்தின் காலுக்கு
            கீழாய் வீழ்ந்து கெட்டது
                        அல்லேலூயா!

3.         இந்நாளில் சீஷர் கர்த்தரின்
            அற்புதக் காட்சி கண்டபின்
            துக்கித்தவர்கள் நெஞ்சுக்கு
            சந்தோஷப் பூரிப்பாயிற்று
                        அல்லேலூயா!

4.         கர்த்தாவே, எங்கள் நீதிக்காய்
            நீர் எழுந்தீர் கெம்பீரமாய்;
            வெற்றி சிறந்த உமக்கே
            மா ஸ்தோத்திரம் உண்டாகவே!
                        அல்லேலூயா!

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...