20 October 2018

அருளின் ஊற்றாம் யேசுவே

ஞாபா:168

To Download Txt Lyrics file

 

168. Elberfield                                              (404)               8, 7, 8, 7, 8, 8, 7.

 

"Herr Jesu Christ du hochstes Gut"

 

1.       அருளின் ஊற்றாம் யேசுவே

                   வியாகுலமும் பாடும்

            அடைந்த என்தன் நெஞ்சிலே,

                        உண்டான நோவைப் பாரும்;

            என் பாவங்கள் அகோரமே

                        அநேக அம்புபோலவே

            என் மனதை வதைக்கும்.

 

2.         மரத்தில் தொங்கி வாதையாய்

                        நீர் பட்ட நோவைப்பாரும்;

            என் நோவை நீக்கி தயவாய்

                        ரட்சிப்பளிக்க வாரும்

            மா துக்கத்தாலே வாடிய

                        என் ஆத்துமாவினுடைய

            நிர்ப்பந்தத்தை விலக்கும்

 

3.         இப்போதும் நொந்திருக்கிற

                        என் மனசாட்சியாலே

            வதைத்த நான் நீர் சிந்தின

                        தெய்வீக ரத்தத்தாலே

            மன்னிப்படைய ஆவலாய்

                        உம்மண்டை வந்து தாழ்மையாய்

            மன்றாடி நிற்கிறேனே.

 

4.         பலத்த ஜீவ ஆவியால்

                        இவ்வேழையைக் காப்பாற்றும்;

            நீர் பாடுபட்டு மாண்டதால்

                        என் சாவில் என்னை ஆற்றும்;

            என் நெஞ்சில் விசுவாசத்தை

                        முடிய காத்தடியேனை

            உம்மண்டை சேர்த்துக் கொள்ளும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...