20 October 2018

நான் வாஞ்சையாய் என் மனதை


169. Eisenach, Leipsic,                   L.M.

"Schaff in mir, Gott, ein reines"

1.         நான் வாஞ்சையாய் என் மனதை
            உயரப் பண்ணி, பாவத்தை
            வெறுக்கச் சுத்த நெஞ்சை நீர்
            என்னில் சிருஷ்டிக்கக்கடவீர்.

2.         மனக் கலக்கம் அற்றோனாய்
            நான் உமக்கேற்ற பக்தியாய்
            நடக்க என்னை நித்தமும்
            நீர் செம்மை ஆக்கியருளும்.

3.         இச்சையின் மோசம் என்னிலே
            செய்த பொல்லாப்பைக்கண்டீரே;
            என் நெஞ்சு துயரப்படும்,
            ஆ! கோபமாய் இராதேயும்.

4.         கர்த்தாவே உமதாவியை,
            கொடுத்து எனதுள்ளத்தை
            ப்ரகாசிப்பித்து, யாவையும்
            மன்னித் திரக்கமாய் இரும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...