20 October 2018

தாழ்விலிருந்து கூப்பிடும்


170. Maitland Attolle Paulum  

(Elberfield)                         8, 7, 8, 7, 8, 8, 7.

"Aus tiefer Noth Schrei ich zu dir"

1.         தாழ்விலிருந்து கூப்பிடும்
                        என் சத்தம் கேட்டன்பாக
            நான் செய்கிற மன்றாட்டுக்கும்
                        செவி கொடுப்பீராக;
            கர்த்தாவே, நரர் பாவத்தை
            நீர் மன்னியாமல், நீதியை
                        பார்த்தால், யார் நிற்கக்கூடும்?

2.         மன்னிப்பை மாந்தன் எவனும்
                        தன் புண்ணியங்களாலே
            அடையான்; உம்மை பாவியும்
                        தாழ்வான மனதாலே
            தேடி நம்பிக்கையுடனே
            வந்தால், மா தயவாகவே
                        மன்னிக்கிறீர், கர்த்தாவே.

3.         என் மீட்பர் பேரில் சாவேன்
                        என் புண்ணியம் அபத்தம்;
            தேவன்பையே நான் நம்புவேன்
                        அதற்கு வாக்குத்தத்தம்
            மெய்யான வேத வார்த்தையில்
            உண்டென்பதே என் மனதில்
                        நன்றாய்ப் பதிப்பீராக.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...