ஆ உமது மா தயையால்


171. Brbylon's Streams, Holley                                           

(406)   L.M.

"Erbarm dich mein, O Herre Gott"

1.         ஆ! உமது மா தயையால்
            என் மேல் இரங்கும், கர்த்தரே;
            என் பாவ பாதங்களால்
            மனம் கலங்ககின்றதே.

2.         நான் செய்த பாவம் உமக்கே
            விரோதம் என்றழுகிறேன்;
            நீர் தண்டித்தல் நியாயமே,
            என்றாலும் மன்னிப்பீயுமே.

3.         நான் ஜென்மத்தால் அடைந்த சீர்
            எல்லாப் பொல்லாங்கும் பாவமும்;
            நல் உண்மையை விரும்பும் நீர்
            சுத்தாங்கத்தை தந்தருளும்.

4.         என் பாவக் குஷ்ட ரோகத்தை
            அகற்றி என்னைக் கழுவும்,
            நொறுக்கப்பட்ட ஆவியை
            திரும்பவும் உயிர்ப்பியும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே