25 October 2018

ஆ இவ்வேழைக்கு இரங்கும்

ஞாபா:172

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

172. Lugano, Deerhurst                                                        8s, 7s, 8l.

 

                             "Liebster Jesu, in den Tagen"

 

1.       ஆ! இவ்வேழைக்கு இரங்கும்,

                        ஆத்ம பரிகாரியே;

            என்னைப் பாரும், என்னில் எங்கும்

                        நோவும் ரோகமும் உண்டே;     

            பாவக் குஷ்டம் முற்றும் நீங்க

                        கையை நீட்டித் தொடுமேன்;

            சருவாங்க சொஸ்தமாக

                        நீர் கடாட்சம் செய்யுமேன்.

 

2.         உம்முடைய வஸ்திரத்தின்

                        ஓரம் தொடவே வந்தேன்;

            சொஸ்தம் ஈயும் தேவரீரின்

                        சத்துவத்தை நம்பினேன்;

            அச்சம் நீக்கும் திவ்ய வாக்கை

                        அன்பால் பொங்கிச் சொன்னீரே

            ஆ! கர்த்தாவே, நல்ல சீரை

                        அனுக்கிரகம் செய்யுமே.

 

3.         ஏழைப்பாவி செய்த ஜெபம்

                        கேட்டுப் பாவம் போக்கினீர்;

            சுத்தமாக்கி உம் சமீபம்

                        என்னைச் சேர்த்து அணைத்தீர்;

            அதால் பயபக்தியாக

                        ஸ்தோத்திரஞ் செலுத்துவேன்,

            உம்மையே புகழ்ச்சியாக

                        வாழ்த்தல் சொல்லி ஏத்துவேன்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...