வல்ல இயேசு கிறிஸ்து நாதா


173. St. Andrew - St. Oswald, Trust                       8s, 72.

"Blessed Jesus, loving Saviour"

1.         வல்ல யேசு கிறிஸ்து நாதா,
                        நல்ல நேச மீட்பர் நீர்;
            பற்று, பாசம் கட்டு முற்றும்
                        அற்றுப்போகப் பண்ணுவீர்.

2.         அருள் ஜோதி தோன்றிடாமல்,
                        இருள் மூடிக் கிடந்தோம்;
            திக்கில்லாமல் பாவப் பற்றில்
                        சிக்கிக் கொண்டே இருந்தோம்.

3.         பக்தி ஒன்றுமில்லை, பாரும்
                        சக்தியற்றுப் போயினோம்;
            ஜீவ பாதை சென்றிடாமல்
                        பாவ பாதை நடந்தோம்.

4.         யேசு நாதரே, இப்போது
                        நேசமாக நிற்கிறீர்;
            “என்னை நம்பு, பாவம் நீக்கி
                        உன்னைக் காப்பேன்” என்கிறீர்.

5.         நம்பி வந்து, பாவ நாசா,
                        உந்தன் பாதம் அண்டினோம்;
            தூய ரத்தம் பாயக் கண்டு,
                        தீய செய்கை வெறுத்தோம்.

6.         பாவச் சேற்றில் விழாமல்
                        தேவரீரே காத்திடும்;
            வல்ல ஆவியாலே என்றும்
                        வெல்லச் செய்து ரட்சியும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு