வா பாவி இளைப்பாற வா
174. Vox dilecti D.C.M.
"I heard the voice of Jesus say"
1. "வா,
பாவி, இளைப்பாற வா,
என்
திவ்ய மார்பிலே
நீ சாய்ந்து சுகி," என்பதாய்
நல்
மீட்பர் கூறவே,
இளைத்துப்போன நீசனாய்
வந்தாறித்
தேறினேன்;
என் பாரம் நீங்கி, யேசுவால்
சந்தோஷமாயினேன்.
2. "வா, பாவி, தாகந்தீர்க்க வா,
தாராளமாகவே
நான் ஜீவ தண்ணீர் தருவேன்,"
என்றார்
என் நாதரே;
அவ்வாறு ஜீவ ஊற்றிலே
நான்
பானம் பண்ணினேன்;
என் தாகம் தீர்ந்து பலமும்
பேர்
வாழ்வும் அடைந்தேன்.
3. "வா, பாவி, இருள் நீங்க வா;
நான்
லோக ஜோதியே,
உன் நெஞ்சில் ஒளி வீசுவேன்,"
என்றார்
என் நேசரே;
மெய்ஞான அருணோதயம்
அவ்வாறு
நான் கண்டேன்;
அஜ்ஜோதியில் சந்தோஷமாய்
நான்
என்றும் ஜீவிப்பேன்.
Comments
Post a Comment