16 October 2018

நன்மைச் சொரூபியே


122. Stobel, Calvari  - Olivet                 6, 6, 4, 6, 6, 6, 4.

"All, and in all"

1.         நன்மைச் சொரூபியே,
            மோட்சத்தின் ஜோதியே,
                        ப்ரகாசியும்;
            எட்டாத ரட்சிப்பை,
            எண்ணா மகிமையை;
            விடாத தயவை
                        அளித்திடும்.

2.         பூலோக ரட்சகர்
            சர்வ தயாபரர்
                        தேவரீரே;
            சுத்தமும் ஜீவனும்
            வாடாக் கிரீடமும்
            பூரண மீட்சியும்
                        அருள்வீரே.

3.         ஆதியும் அந்தமும்
            நித்தியம் ஞானமும்
                        தேவரீரே;
            நீரே என் வாஞ்சையும்
            நீரே என் தஞ்சமும்
            சமஸ்த நன்மையும்
                        ஆனவரே.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...