16 October 2018

எங்களுக்கு மீட்பராக


123. St. Oswald, stuttgart                                                     8s, 7s.

"Victory through Christ"

1.         எங்களுக்கு மீட்பராக
                        தேவ மைந்தனான நீர்
            பூமியில் மா ஏழையாக
                        மனுபுத்திரன் ஆனீர்.

2.         ஆதி தந்தை மூலமாக
                        வந்த பாவ தோஷத்தை
            நீர் சுமந்து, பலியாக
                        நீக்கினீர் என் பாரத்தை.

3.         நாங்கள் உம்மைப்பற்றிக் கொண்டு
                        நற் போராட்டம் பண்ணியே
            பாவம் லோகம் சாவை வென்று
                        மோட்சம் சேரச் செய்யுமே.

4.         வெற்றிகொண்ட பக்தர் சபை
                        விண்ணோரோடு என்றைக்கும்
            உம்தன் ஒப்பில்லாத அன்பை
                        போற்றிப் பாடித் துதிக்கும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...