16 October 2018

தூய ஆட்டுக்குட்டியே


121. Lubeck, St. Bees

"Stilles Lamm und Friedefurst"

1.         தூய ஆட்டுக்குட்டியே,
            நீர் என் நெஞ்சின் வாஞ்சையே;
            எப்போ தேழை அடியேன்
            உமக் கேற்றவன் ஆவேன்?

2.         நானும் மனத் தாழ்மையாய்
            சாந்தமுள்ள சிந்தையாய்
            என் உள்ளத்தை உமக்கே
            படைப்பேன் என் கர்த்தரே.

3.         வாதையான நோவிலும்
            மரண இக்கட்டிலும்
            உம்மை என்றும் பற்றவே
            துணை செய்யும் மீட்பரே.

4.         மோட்சத்தில் உம்மோடுதான்
            மாசில்லாதோனாக நான்
            என்றும் வாழச் செய்திடும்,
            உம்மைப் போற்ற அருளும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...