மா தேவ ஆவியே


136. Harewood,                       6, 6, 6, 6, 8, 8.

"The earnest of the Spirit"

1.                     மா தேவ ஆவியே,
                        என் நெஞ்சில் தங்கிடும்,
                        பேரின்ப வீட்டுக்கே
                        அச்சமாயிரும்;
            அசுத்தம் நீக்கித் தயவாய்
            நல் ஈவைத் தாரும் நிறைவாய்.

2.                     நீர் காட்டும் பாதையால்
                        பிதாவை அண்டுவேன்;
                        நீர் ஈயும் அருளால்
                        நான் வேண்டிக்கொள்ளுவேன்;
            என் ரட்சிப்பை நீர் நேசமாய்
            உறுதியாக்கும் நித்தமாய்.

3.                     இறங்கும் ஆவியே,
                        என் நெஞ்சைத் தேற்றிடும்;
                        என் வழி காட்டியே;
                        தப்பாமல் நடத்தும்;
            மன்றாட்டைக் கேட்டு வாருமேன்;
            என் நெஞ்சில் வாசஞ் செய்யுமேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு