காற்றுத்திசை நான்கிலும்


137. Redhead  45                                                                   7s.

"Breathe upon us"

1.         காற்றுத்திசை நான்கிலும்
            நின்றுலர்ந்த எலும்பும்
            ஜீவன் பெறச்செய்யுமே,
            வல்ல தேவ ஆவியே.

2.         ஈரமற்ற நெஞ்சத்தில்
            பனிபோல் இந்நேரத்தில்
            இறங்கும் நல்லாவியே;
            புது ஜீவன் தாருமே.

3.         சத்துவத்தின் ஆவியே
            பேயை நித்தம் வெல்லவே
            துணை செய்ய வாருமேன்,
            போந்த சக்தி தாருமேன்.

4.         ஞானம் பெலன் உணர்வும்
            அறிவும் விவேகமும்
            தேவ பக்தி பயமும்
            ஏழும் தந்து தேற்றிடும்.

5.         தந்தை மைந்தன் ஆவியே
            எங்கள் பாவம் நீங்கவே
            கிருபை கடாட்சியும்
            சுத்தமாக்கியருளும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே