துக்க பாரத்தால் இளைத்து
156. Stephanos, Cairnbrook 8, 5, 8, 3.
"Art thoug weary, art thou languid"
1. துக்க பாரத்தால்
இளைத்து
நொந்து
போனாயோ?
யேசு உன்னைத் தேற்றிக்கொள்வார்
வாராயோ?
2. “அன்பின் ரூப காரமாக
என்ன
காண்பித்தார்?”
“அவர் பாதம் கை விலாவில்
காயம்
பார்.”
3. “அவர் சிரசதின் கிரீடம்
செய்த
தெதனால்?”
“ரத்தினம் பொன்னாலுமல்ல
முள்ளினால்.”
4. “கண்டுபிடித் தண்டினாலும்
துன்பம்
வருமோ!”
“கஷ்டம், துக்கம், கண்ணீர்யாவும்
இம்மையே.”
5. “அவரைப் பின்பற்றி னோர்க்கு
துன்பம்
மாறுமோ?”
“சாவின் கூரும் மாறிப்போகும்,
போதாதோ?”
6. “பாவியெனை ஏற்றுக்கொள்ள
மாட்டேன்
என்பாரோ!”
“விண், மண் ஒழிந்தாலும் உன்னை
தள்ளாரே!”
7. “போரில் வெற்றி சிறந்தோர்க்கு
கதியா
ஈவார்?”
“தூதர், தீர்க்கர், தூயர், யாரும்
ஆம்,
என்பார்.”
Comments
Post a Comment