விருந்தைச் சேருமேன்


154. St. Edmund; Feast            6, 4, 6, 4, 6, 6, 6, 4.

"Come, for the feast is spread"

1.         விருந்தைச் சேருமேன்,
                        அழைக்கிறார்;
            ஆகாரம் பாருமேன்,
                        போஷிப்பிப்பார்;
            தாகத்தைத் தீர்க்கவும்
            யேசுவின் மார்பிலும்
            சாய்ந்திளைப்பாறவும்
                        வா, பாவி, வா.

2.         ஊற்றண்டை சேரவும்,
                        ஜீவனுண்டாம்;
            பாடும் விசாரமும்
                        நீங்கும் எல்லாம்;
            நம்பி வந்தோருக்கு
            திர்ப்தி உண்டாயிற்று;
            ஜீவாற்றின் அண்டைக்கு
                        வா, பாவி, வா.

3.         மீட்பரின் பாதமும்
                        சேராவிடில்,
            தோல்வியே நேரிடும்
                        போராட்டத்தில்;
            யேசுவே வல்லவர்,
            யேசுவே நல்லவர்,
            யேசுவே ஆண்டவர்;
                        வா, பாவி, வா.

4.         மோட்சத்தின் பாதையில்
                        முன் செல்லுவாய்;
            சிற்றின்ப வாழ்வினில்
                        ஏன் உழல்வாய்?
            வாடாத க்ரீடமும்
            ஆனந்தக் களிப்பும்
            பேர் வாழ்வும் பெறவும்
                        வா, பாவி, வா.

5.         சேருவேன், யேசுவே
                        ஏற்றுக்கொள்வீர்;
            பாவமும் அறவே
                        சுத்தம் செய்வீர்;
            அப்பாலே மோட்சத்தில்
            ஆனந்தக் கடலில்
            மூழ்கிப் பேரின்பத்தில்
                        கெம்பீரிப்பேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு