உங்களைப் படைத்தவர்
153. Ramoth, Maidstone, Blumenthal 7s, 8l.
"Sinners turn, why will ye die?"
1. உங்களைப்
படைத்தவர்,
சருவ தயாபரர்;
தம்மில் வாழ்ந்து ஜீவிக்க,
என்றும் தம்மோடிருக்க
ஆசைப்பட்டோர் உங்களைப்
பார்த்து, “என் சிநேகத்தை
தள்ளிவிட்டு நிற்பதார்?
திரும்புங்கள்”, என்கிறார்.
2. உங்களை ரட்சித்தவர்
தெய்வ சுதனானவர்;
திரு ரத்தம் சிந்தினார்,
சிலுவையில் மரித்தார்;
“நீங்கள் வீணில் சாவதேன்
செத்து உங்களை மீட்டேன்”
என்று கூறி நிற்கிறார்,
“திரும்புங்கள்,” என்கிறார்.
3. உங்களை நேசிப்பவர்,
தூய ஆவியானவர்;
நயம் பயம் காட்டினார்,
குணப்பட ஏவினார்;
“தயை பெற வாரீரோ,
மீட்பைத் தேடமாட்டீரோ!”
என்றிரங்கிக் கேட்கிறார்,
“திரும்புங்கள்,” என்கிறார்.
Comments
Post a Comment