தெய்வன்புதான் மா இனிமை
O Love Divine how sweet Thou art
Cornwall. Purleigh
362 8,
8, 6 D.
1. தெய்வன்புதான்
மா இனிமை,
அதற்கென்றே என் உள்ளத்தைக்
கொடுத்திருக்கிறேன்;
என் மீட்பர் அன்பின் அளவை
அறிவதே என் மகிமை;
எப்போது அறிவேன்?
2. பாதாளம் சாவைப் பார்க்கிலும்
அவரின் நேசம் பலமும்
ஆழமுமானதே;
பூலோகத்தார் எல்லாருக்கும்
மாட்சிமையுள்ள வானோர்க்கும்
எட்டாததாயிற்றே.
3. தெய்வன்பின் ஆழம், கர்த்தாவே;
அளந்து பார்த்தவர் நீரே,
அன்பின்
பிரவாகத்தை
என் ஏழை நெஞ்சில் ஊற்றிடும்;
இதே என் உள்ளம் வாஞ்சிக்கும்
தீராத வாஞ்சனை.
4. உம் திரு முகம் பார்ப்பதும்,
உம்மண்டை நித்தம் சேர்வதும்,
என் முழு வாஞ்சையாம்;
உம் திவ்விய சத்தம் கேட்பது
எனக்கு இன்பம், களிப்பும்,
என் மோட்ச பாக்கியமாம்.
Comments
Post a Comment