13 October 2018

தெய்வாசன முன் நிற்பரே


Around the Throne of God a band
Guardian Angels

160                                                                                   L.M.

1.         தெய்வாசன முன் நிற்பரே
            சேவகத் தூதர் சேனையே;
            பண் மீட்டி விண்ணில் பாடுவர்
            பொன்முடி மாண்பாய் சூடுவர்.

2.         சன்னிதி சேவை ஆற்றுவர்;
            இன்னிசை பாடிப் போற்றுவர்;
            நாதரின் ஆணை ஏற்றுமே
            மேதினியோரைக் காப்பரே.

3.         நாதா உம் தூதர் நாளெல்லாம்
            நடத்திட நற்பாதையாம்;
            மாலை இராவின் தூக்கத்தில்
            சீலமாய்க் காக்க பாங்கினில்.

4.         எத்தீங்கு பயம் சேதமே
            கர்த்தா தொடாது எங்களை
            வாணாள் முடிந்தும் பாதமே
            மாண்பாகச் சேர்வோம் தூதரை.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...