தெய்வாட்டுக் குட்டிக்கு
Crown Him with many crowns
Diamemata
134 D.S.M.
1. தெய்வாட்டுக்
குட்டிக்கு
பன் முடி சூட்டிடும்;
இன்னிசையாய்ப் பேரோசையாய்
விண் கீதம் முழங்கும்;
உள்ளமே போற்றிடு,
உனக்காய் மாண்டோராம்;
சதாகாலமும் அவரே
ஒப்பற்ற வேந்தராம்.
2. அன்பார்ந்த கர்த்தர்க்கு
பன் முடி சூட்டிடும்;
கை கால் விலாவின் காயங்கள்
விண்ணிலும் விளங்கும்.
பார்ப்பரோ தூதரும்
ஏறிட்டக் காயங்கள்?
பணிவரே சாஷ்டாங்கமாய்
மூடுவர் தம் கண்கள்.
3. சமாதானக் கர்த்தர்!
பன் முடி சூட்டிடும்;
போர் ஓய்ந்து ஜெப ஸ்தோத்ரமே
பூமியை நிரப்பும்;
ஆள்வார் என்றென்றைக்கும்;
ஆளும் எவ்விடமும்
விண் லோக பாக்கியச் சிறப்பு
விளங்கி வளரும்.
4. ஆண்டாண்டும் ஆள்வோர்க்கு
பன் முடி சூட்டிடும்;
சராசரங்கள் சிஷ்டித்தோர்
உன்னத தெய்வமும்;
பாவிக்காய் ஆருயிர்
ஈந்த என் மீட்பரே,
சதா நித்திய காலமாய்
உமக்குத் துதியே.
Comments
Post a Comment