13 October 2018

தெய்வன்புக்காக உன்னத


Allein Gott in der Hoh sei Ehr
Bavarian 8

141                                                                 8, 7, 8, 7, 8, 8, 7

1.         தெய்வன்புக்காக உன்னத
                         கர்த்தாவுக்குப் புகழ்ச்சி;
            என் பாவக்கேட்டை நீக்கின
                         அருள் மகா திரட்சி;
            மெய்ச் சமாதானம், என்றைக்கும்
            மானிடர்மேல் பிரியமும்
                        உண்டாம் இரக்கம் பெற்றோம்.

2.         மாறாமல் ஆண்டிருக்கிற
                        மகத்துவப் பிதாவே,
            துதியோடும்மைக் கும்பிடப்
                        பணிகிறோம் கர்த்தாவே,
            அளவில்லாப் பலமாய் நீர்
            நினைத்த யாவும் செய்கிறீர்;
                        மா பாக்கியர் அடியார்.

3.         ஆ, இயேசு தெய்வ மைந்தனே;
                        கடன்களைச் செலுத்தி
            கெட்டோரை மீட்ட மீட்பரே,
                        மாசற்ற ஆட்டுக்குட்டி
            மா கர்த்தரே, தயாபரா,
            அடியார் சத்தம் கேட்டெல்லா
                        சபைக்கும் நீர் இரங்கும்.

4.         மெய்யாகத் தேற்றும் உன்னத
                        தெய்வாவீ நீர் அன்பாக
            இறங்கி, கிறிஸ்து தம்முட
                        சாவால் பிரியமாக
            மீட்டோரைச் சாத்தான் கண்ணியில்
            விழாதே காத்து, துன்பத்தில்
                        ஜெயிக்கப்பண்ணும், ஆமேன்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...