பாலரே ஓர் நேசர் உண்டு


There's Friend for little children
In Memoriam

245                                   8, 6, 7, 8, 7, 6, 7, 6.

1.         பாலரே, ஓர் நேசர் உண்டு
                    விண் மோட்ச வீட்டிலே;
            நீங்கா இந்நேசர் அன்பு
                        ஓர் நாளும் குன்றாதே.
            உற்றாரின் நேசம் யாவும்
                        நாள் செல்ல மாறினும்
            இவ்வன்பர் திவ்விய நேசம்
                        மாறாமல் நிலைக்கும்.

2.         பாலரே, ஓர் வீடு உண்டு
                        விண் மோட்ச நாட்டிலே
            பேர் வாழ்வுண்டாக இயேசு
                        அங்கரசாள்வாரே;
            ஒப்பற்ற அந்த வீட்டை
                        நாம் நாட வேண்டாமோ?
            அங்குள்ளோர் இன்ப வாழ்வில்
                        ஓர் தாழ்ச்சிதானுண்டோ!

3.         பாலரே, ஓர் கிரீடம் உண்டு
                        விண் மோட்ச வீட்டில் நீர்
            நல் மீட்பரின் பேரன்பால்
                        பொற் கிரீடம் அணிவீர்;
            இப்போது மீட்பைப் பெற்று
                        மா நேசர் பின்சென்றார்;
            இவ்வாடா ஜீவ கிரீடம்
                        அப்போது சூடுவார்.

4.         பாலரே, ஓர் கீதம் உண்டு
                        விண் மோட்ச வீட்டிலே
            மா ஜெய கீதம் பாட
                        ஓர் வீணையும் உண்டே;
            அந்நாட்டின் இன்பம் எல்லாம்
                        நம் மீட்பர்க்குரிமை;
            நீர் அவரிடம் வாரும்
                        ஈவார் அவ்வின்பத்தை.

(68, 73, 76, 346 பாக்களும் பொருத்தமானவை)

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு