பார் முன்னணை ஒன்றில்


Away in a manger
Cradle Song

244                                                              11, 11, 11, 11

1.         பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே
            பாலனாம் நம் இயேசு கிடந்தனரே;
            வெளியில் புல்மீது தூங்கும் பாலன்தாம்
            காண மின்னிட்டதே வான் வெள்ளிகள்தாம்.

2.         மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,
            ஆயின் பாலன் இயேசு அழவே மாட்டார்;
            நான் நேசிக்கும் நாதர்; நீர் நோக்கிப் பார்ப்பீர்
            தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர்.

3.         என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,
            என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்
            உம் பாலர் தம்மை நீர் ஆசீர்வதித்தே
            சேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே