யுத்தம் செய்வோம் வாரும்


Onward Christian Soldiers

St. Gertrude.  Onward Christian

384                                      6, 5, 6, 5 D with refrain

1.          யுத்தம் செய்வோம், வாரும்,
                        கிறிஸ்து வீரரே!
            இயேசு சேனை கர்த்தர்
                        பின்னே செல்வோமே!
            வெற்றி வேந்தராக
                        முன்னே போகிறார்;
            ஜெயக் கொடி ஏற்றி
                        போர் நடத்துவார்.

            யுத்தம் செய்வோம் வாரும்,
                        கிறிஸ்து வீரரே!
            இயேசு சேனை கர்த்தர்
                        பின்னே செல்வோமே!

2.         கிறிஸ்து வீரர்காள், நீர்
                        வெல்ல முயலும்;
            பின்னிடாமல் நின்று
                        ஆரவாரியும்!
            சாத்தான் கூட்டம் அந்த
                        தொனிக்கதிரும்;
            நரகாஸ்திவாரம்
                        அஞ்சி அசையும்!

3.         கிறிஸ்து சபை வல்ல
                        சேனைபோன்றதாம்;
            பக்தர் சென்ற பாதை
                        செல்கின்றோமே நாம்,
            கிறிஸ்து தாசர் யாரும்
                        ஓர் சரீரமே;
            விசுவாசம், அன்பு,
                        நம்பிக்கை ஒன்றே.

4.         கிரீடம், ராஜ மேன்மை
                        யாவும் சிதையும்,
            கிறிஸ்து சபைதானே
                        என்றும் நிலைக்கும்;
            “நரகத்தின் வாசல்
                        ஜெயங்கொள்ளாதே”,
            என்ற திவ்விய வாக்கு
                        வீணாய்ப் போகாதே.

5.         பக்தரே, ஒன்றாக,
                        கூட்டம் கூடுமேன்;
            எங்களோடு சேர்ந்து
                        ஆர்ப்பரியுமேன்!
            விண்ணோர் மண்ணோர் கூட்டம்
                        இயேசு ராயர்க்கே
            கீர்த்தி, புகழ், மேன்மை
                        என்றும் பாடுமே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு