17 October 2018

யாரை நான் புகழுவேன்


Wollt ihr wissen was mein Preis

Sp S 14

271                             7, 7, 7, 7, 7

1.         யாரை நான் புகழுவேன்,
            யாரை நான் அறிகிறேன்?
            என் கதியும் பங்கும் யார்,
            நான் பாராட்டும் மேன்மை யார்?
            தெய்வ ஆட்டுக்குட்டி தான்.

2.         யார் நான் நிற்கும் கன்மலை,
            யார் என் திட நம்பிக்கை?
            குற்றத்தை சுமந்தோர் யார்,
            தெய்வ நேசம் தந்தோர் யார்?
            தெய்வ ஆட்டுக்குட்டி தான்.

3.         எந்தன் பிராண பெலன் யார்,
            ஆத்துமத்தின் சாரம் யார்?
            யாரால் பாவி நீதிமான்,
            யாரால் தெய்வ பிள்ளை நான்?
            தெய்வ ஆட்டுக் குட்டியால்.

4.         கஸ்தியில் சகாயர் யார்,
            சாவின் சாவு ஆனோர் யார்?
            என்னைத் தூதர் கூட்டத்தில்
            சேர்ப்போர் யார் நான் சாகையில்?
            தெய்வ ஆட்டுக்குட்டி தான்

5.         இயேசு தான் என் ஞானமே,
            அவர் என் சங்கீதமே;
            நீங்களும் புகழுங்கள்,
            அவரைப் பின்செல்லுங்கள்,
            தெய்வ ஆட்டுக்குட்டியை.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...