05 October 2018

மா வாதைப்பட்ட யேசுவே


72. Belmont                                                                            C.M.

"His dying love"

1.          மா வாதைப்பட்ட யேசுவே;
                        அன்பின் சொரூபம் நீர்;
            நிறைந்த உந்தன் அன்பிலே
                        நான் மூழ்க அருள்வீர்.

2.         தேவன்பின் ஆழம் அறிய
                        விரும்பும் அடியேன்,
            நீர் பட்ட கஸ்தி ஒழிய,
                        வேறொன்றும் அறியேன்.

3.         என் மீட்பர் ஜீவன் விட்டதால்
                        பூமி அசைந்ததே;
            கன்மலை அதைக் கண்டதால்
                        பிளந்துவிட்டதே.

4.         அவ்வண்ணமாய் என் நெஞ்சத்தை
                        பிளந்து, தேவரீர்,
            உமது சாவின் பலத்தை
                        உணர்த்தக் கடவீர்.

5.         துராசை நீங்கத் தக்கதாய்
                        தெய்வன்பை ஊற்றிடும்;
            கற்போன்ற நெஞ்சை மெழுகாய்
                        உருகச் செய்திடும்.      

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...