அகோரகஸ்தி பட்டோராய்
71. Elberfeld; Luther, 8,7,8,7,8,8,7.
"Who
is he?"
1. அகோரகஸ்தி பட்டோராய்
வதைந்து
வாடி நொந்து
குரூர
ஆணி தைத்தோராய்
தலையைச்
சாய்த்துக் கொண்டு
மரிக்கிறார்
மா நிந்தையாய்!
துன்மார்க்கர்
சாகும் வண்ணமாய்
மரித்த இவர் யாவர்?
2. சமஸ்தமும்
மா வடிவாய்
சிஷ்டித்து
ஆண்டுவந்த
எக்காலமும்
விடாமையாய்
விண்ணோரால்
துதிபெற்ற
மா
தேவ மைந்தன் இவரோ?
இவ்வண்ணம்
துன்பப்பட்டாரோ
மா தேவ நேச சுதன்?
3. அநாதி
ஜோதி நரனாய்
உலகத்தில்
ஜென்மித்து,
அரூபி
ரூபி தயவாய்
என்
கோலத்தை எடுத்து
மெய்யான
பலியாய் மாண்டார்,
நிறைந்த
மீட்புண்டாக்கினார்
என் ரட்சகர், என் தேவன்.
Comments
Post a Comment