எங்கே சுமந்து போயினீர்


70. Chester: lifracomb                                              (379)   C.M

"Wither wih this erushing load?"

1.          எங்கே சுமந்து போயினீர்
                        சிலுவையைத்தானே?
            ஏன் பாடுபட்டு மரித்தீர்
                        மாசற்ற மீட்பரே?

2.         கல்வாரி மேட்டிலெனக்காய்
                        அவஸ்தைப்பட்டீரே;
            நான் அதை எண்ணிப் பக்தியாய்
                        ஜீவிக்கச் செய்யுமே.

3.         நீர் பட்ட பாடும் துக்கமும்
                        வாக்குக்கெட்டாததே
            இவ்வன்பை நான் எக்காலமும்
                        நினைத்துக் கொள்வேனே.

4.         என் நெஞ்சில் உம்மை ஊக்கமாய்
                        நான் சிந்தை செய்யவும்
            நல்லாவியை நீர் நேசமாய்
                        கடாட்சித்தருளும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு