நல் மீட்பர் இயேசு நாமமே
189. St. Peter C.M.
"How Sweet the name of Jesus..."
1. நல் மீட்பர்
யேசு நாமமே
என்
காதுக்கின்பமாம்;
புண்பட்ட நெஞ்சை ஆற்றவே
ஊற்றுண்ட
தைலமாம்.
2. அந்நாமம் நைந்த ஆவியை
நன்றாகத்
தேற்றுமே,
துக்கத்தால் தொய்ந்த உள்ளத்தை
திடப்படுத்துமே.
3. பசித்த ஆத்துமாவுக்கு
மன்னாவைப்
போலாகும்;
இளைத்துப் போன ஆவிக்கு
ஆரோக்யம்
தந்திடும்.
4. என் ரட்சகா, என் கேடகம்,
என்
கோட்டையும் நீரே;
நிறைந்த அருள் பொக்கிஷம்,
அனைத்தும்
நீர் தாமே.
5. மா நேசர், மேய்ப்பர், பர்த்தாவும்,
என்
ஜீவனும் நீரே;
என் தீர்க்கரும், என் ராஜாவும்
ஆசாரியருமே.
6. ப்ராண நாதா ஆண்டவா
நான் உம்மைப் போற்றுவேன்;
என் வாழ் நாளெல்லாம் ரக்ஷகா;
பேரன்பை சாற்றுவேன்.
7. என் ஜீவன் போகும் நேரமும்
உம் நாமம் பற்றுவேன்;
எப்போதும் அதைப் பாடவும்
விண் கரையேறுவேன்.
Comments
Post a Comment