25 October 2018

மிகுந்த தயவாலே


188. Munich, Ellacombe. 

Rutherford.                   (408)   7s, 6s, 8l.

"The great love where with He..."

1.         மிகுந்த தயவாலே
                        ரட்சிக்க மீட்பரே,
            தெய்வீக அன்பினாலே
                        நிறைந்த யேசுவே,
            நான் உம்மோடைக்யமாக
                        நீர் என்னைக் கூப்பிட்டீர்
            நான் உம்மை என்றும் சார
                        நீர் தயை காண்பிப்பீர்.

2.         கல்லான இந்த நெஞ்சை
                        மிருதுவாக்கியே,
            சீர்கெட்ட விருப்பத்தை
                        கட்டோடே அழித்தே
            நான் என்றும் உம்மில் நிற்க
                        அன்பாக காத்திடும்;
            நான் உண்மையில் நிலைக்க
                        பெலன் கடாட்சியும்.

3.         என் முழு மனதோடு
                        லோகத்தை வெறுப்பேன்,
            விடாத ஆவலோடு
                        யேசுவை வாஞ்சிப்பேன்;
            இவ்வாஞ்சை என்றுமாக
                        நிலைக்கும்படிக்கே,
            கர்த்தாவே தயவாக
                        சகாயம், செய்யுமே.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...