விண் ஏகுமுன் நல் வார்த்தையை


140. St. Cuthbert                            8, 6, 8, 4.

"Our blest Redeemer ere He..."

1.         விண் ஏகுமுன் நல் வார்த்தையை
                        நம்மீட்பர் மொழிந்தார்;
            மா தூய தேற்றரவாளனை
                        வாக்களித்தார்.

2.         அவ்வாறு வல்ல ஆவியே
                        சகாயராய் வந்தார்;
            மெய்ப் பக்தர் நைந்த நெஞ்சிலே
                        சஞ்சரிப்பார்.

3.         ஆகாத சிந்தை தோன்றினால்
                        மேலிடவே ஒட்டார்;
            வீண் பயமும் மென் சொல்லினால்
                        அகற்றுவார்.

4.         நற்குணம், செய்கை, விருப்பம்
                        மெய்ப் பக்தி யாவுமே
            தேவாவியாலே மாத்திரம்
                        உண்டாகுமே.

5.         மா தூய நேச ஆவியே,
                        தாசர்க் கிரங்குமேன்;
            சுத்தாங்கம் தந்து நெஞ்சிலே
                        வந்தாளுமேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு