பாவிக்காய் மரித்த யேசு


87. Helmsley                                                              8, 7, 8, 7, 4, 7

"Lo! He comes with clouds..."

1.          பாவிக்காய் மரித்த யேசு
                        மேகமீதில் இறங்குவார்;
            கோடி தூதர் அவரோடு
                        வந்து ஆரவாரிப்பார்;
                                    அல்லேலூயா!
                        கர்த்தர் பூமி ஆளுவார்.

2.         வெண்மையான ஆசனத்தில்
                        வீற்று வெளிப்படுவார்;
            துன்புறுத்திச் சிலுவையில்
                        கொன்றோர் அவரைக்காண்பார்
                                    திகிலோடே
            அவர் சத்தத்தைக் கேட்பார்.

3.         அவர் தேகம் பட்ட காயம்
                        அன்றும் காணப்படுமே;
            பக்தர்கள் மகிழ்ச்சியாயும்
                        நோக்குவார்கள் அப்போதே;
                                    அவர் காயம்
            தரும் நித்ய ரட்சிப்பை.

4.         உம்மை நித்ய ராஜனாக
                        யாரும் போற்றச் செய்திடும்;
            ராஜரீகத்தை அன்பாக
                        ஏற்று ஆளும் என்றைக்கும்;
                                    ஆ, கர்த்தாவே
            சீக்கிரம் வந்தருளும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு