17 October 2018

வானம் பூமி ஓடிப்போகும்


88. Mannhein; Zion                                                   8, 7, 8, 7, 4, 7

"Heaven and earth shall pass away"

1.         வானம் பூமி ஓடிப்போகும்
                        மேகத்தின்மேல் வருவார்;
            அவர் முன்பு லோகம் யாவும்
                        கூடி நிற்க அழைப்பார்.
                                    மரித்தோரும்
            ஜீவன் உற்றுக் கூடுவார்.

2.         முன்பு ஏழையாக வந்து
                        முட்கிரீடம் தாங்கினோர்,
            நொந்து மரத்தில் இறந்து
                        ஜீவனற்றுக் கிடந்தோர்
                                    தாமே ரூபம்
            மாறி விண்ணில் தோன்றுவார்.

3.         நீதிமான்கள் பயமின்றி
                        ஆண்டவரை வாழ்த்துவார்;
            அவரோடு வானில் ஏறி
                        என்றென்றைக்கும் வாழுவார்;
                                    தீயோர் நாணி
                        சாபம் பெற்று அழிவார்.

4.         யேசுவே, நீர் வரும் நாளில்
                        என்னை நினைத்தருளும்;
            நீதிமான்கள் சேரும் வீட்டில்
                        நானும் சேர அழையும்;
                                    ஆசீர்வாதம்
                        தந்து, என்னை ரட்சியும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...