பூலோகத்தின் மீட்பர் சிங்காசனம்


89. Burlington.                                                                      12, 11, 12, 8.

"The Prince of Salvation in triumph is riding"

1.         பூலோகத்தின் மீட்பர் சிங்காசனம் ஏறி,
                   செங்கோலுஞ் செலுத்த மெய்யாய் வருவார்;
            மெய்த் தாசர் இப்போது இச்செய்தியைக் கூறி,
                        பூவெங்கும் பிரஸ்தாபிக்கின்றார்.

2.         தேசாதேசமாக அந்தந்த ஜனங்கள்
                        ராஜாக்களும் கூட பேரானந்தமாய்;
            ஒரே கூட்டமாக வந்தாராதிப்பார்கள்
                        நன்மீட்பரை வணக்கமாய்.

3.         பூலோகத்தார் யாரும் விண்ணோர்களைப் போலே
                        மாசற்ற சுத்தாங்கராய்த் தொண்டு செய்வார்;
            சங்கீதங்கள் பாடி, மகா களிப்போடே
                        ஆனந்த கெம்பீரங் கொள்வார்.

4.         பூலோகத்தின் மீட்பர் சிங்காசனம் ஏறி
                        செங்கோலுஞ் செலுத்த மெய்யாய் வருவார்;
            விண்ணோரும் மண்ணோரும் சங்கீர்த்தனம் கூறி
                        முன்பின் சேனையாய்ப் பணிவார்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு