12 October 2018

பிளவுண்ட மலையே


109. Readhed 76                                              7s, 6l.

"Rock of Ages cleft for me"

1.         பிளவுண்ட மலையே,
            புகலிடம் தாருமே;
            பக்கம் பட்ட காயமும்,
            பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
            பாவ தோஷங்கள் யாவும்
            போக்கும்படி அருளும்.

2.         கண்ணீர் நித்தம் சொரிந்தும்,
            கஷ்டதவம் புரிந்தும்
            பாவம் நீங்கமாட்டாதே,
            நீரே மீட்பர், யேசுவே;
            ஏதுமின்றி ஏழையேன்
            உம்மில் தஞ்சம் புகுந்தேன்.

3.         நிழல்போன்ற வாழ்வினில்,
            கண்ணை மூடும் சாவினில்,
            மறுமைக்குப் போகையில்,
            நடுத்தீர்ப்புத் தினத்தில்
            பிளவுண்ட மலையே,
            புகலிடம் தாருமே.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...