எந்தன் ஆத்ம நேசரே


108. Hollingside                                             7s, 8l.

"Jesus lover of my soul"

1.         எந்தன் ஆத்ம நேசரே
            வெள்ளம்போன்ற துன்பத்தில்,
            தாசன் திக்கில்லாமலே
            தடுமாறிப் போகையில்
            தஞ்சம் தந்து, யேசுவே
            திவ்ய மார்பில் காருமேன்;
            அப்பால் கரையேற்றியே
            மோட்ச வீட்டில் சேருமேன்.

2.         வல்ல தேவரீர் அல்லால்
            வேறே தஞ்சம் அறியேன்;
            கைவிடாமல் நேசத்தால்
            ஆற்றித் தேற்றித் தாங்குமேன்,
            நீரே என்தன் நம்பிக்கை;
            நீர் சகாயம் செய்குவீர்;
            ஏதுமற்ற ஏழையை
            செட்டையாலே மூடுவீர்.

3.         குறை யாவும் நீக்கிட,
            நாதா, நீர் சம்பூரணர்,
            திக்கற்றோரைத் தாங்கிட
            நீரே மா தயாபரர்;
            நான் அசுத்த பாவிதான்,
            நீரோ தூயர் சுத்தரே;
            நான் அநீதி கேடுள்ளான்,
            நீர் நிறைந்த நித்யரே.

4.         பாவம் யாவும் மன்னிக்க
            ஆரருள் அமைந்த நீர்
            என்னைச் சுத்திகரிக்க
            அருள் பாயச் செய்குவீர்,
            ஜீவ ஊற்றாம் யேசுவே,
            எந்தன் தாகம் தீருமேன்;
            ஸ்வாமி, என்றும் என்னிலே
            நீர் சுரந்து ஊறுமேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு