பரத்தின் ஜோதியே


107. Raleigh. - Christ Church, Lenox          (390) 6, 6, 6, 6, 8, 8.

"Zeuch meinen Geist triff meinee..."

1.                 பரத்தின் ஜோதியே,
                        என்மேல் இறங்கிடும்,
                        ப்ரகாசத்துடனே
                        உள்ளத்தில் விளங்கும்;
            நீர் ஜீவ ஜோதி, தேவரீர்
            நற் கதிர் வீசக்கடவீர்.

2.                     நிறைந்த அருளால்
                        லௌகீக ஆசையை
                        அகற்றி, ஆவியால்
                        பேரின்ப வாஞ்சையை
            வளர்த்து நித்தம் பலமாய்
            வேரூன்றச் செய்யும் தயவாய்.

3.                     நீர் என்னை ஆளுகில்,
                        நான் வாழ்ந்து பூரிப்பேன்;
                        நீர் என்னை மறக்கில்,
                        நான் தாழ்ந்து மாளுவேன்;
            என் ஊக்கம் ஜீவனும் நீரே,
            கடாட்சம் செய்யும், கர்த்தரே.

4.                     தேவன்பும் தயவும்
                        உம்மாலேயே உண்டாம்;
                        நற் குணம் யாவுக்கும்
                        நீர் ஜீவ ஊற்றேயாம்;
            நான் வாழும்படி என்றைக்கும்
            என்னை நிரப்பி அருளும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு