12 October 2018

கர்த்தாவாம் யேசுவே


106. Olivet Moscow,                                  6, 6, 4, 6, 6, 6, 4.

"Herr Jesu, ew'ges Licht"

1.         கர்த்தாவாம் யேசுவே,
            அடியார் நெஞ்சிலே
                        சீர் அருளும்;
            விடாத தயவாய்,
            பூரண ஒளியாய்
            விளங்கி உச்சமாய்
                        ப்ரகாசியும்.

2.         பிதாவின் ஈவெல்லாம்
            உம்மாலேயே உண்டாம்,
                        மா தேவனே;
            தயவைக் காண்பிப்பீர்,
            பாவத்தை நீக்குவீர்,
            சுத்தாங்கம் பண்ணுவீர்,
                        ரட்சகரே.

3.         அநாதி ஜோதியே,
            பிதாவின் மைந்தனே
                        வணக்கமாய்
            உம்மண்டை சேருவோம்,
            என்றைக்கும் பற்றுவோம்,
            அன்பாகச் சேவிப்போம்,
                        மெய்ப் பக்தியாய்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...