நீர் நிறைந்த நேசமுள்ளோர்
105. Sleepers, Wake, awake -
Hermhut Irregular
Second
Part
1. நீர் நிறைந்த
நேசமுள்ளோர்
எல்லாரின் மேலும் தயவுள்ளோர்
மகா அன்புள்ள யேசுவே;
உம்மால் தீயோர் பேரிலேயும்
பகல் உதிக்கும், மாரி பெய்யும்,
பெரிய உபகாரியே;
ஆ, இந்த உமது
குணம் என் மனது அடையட்டும்,
என் யேசுவே, நான் உமக்கே
ஒப்பாய் அன்பாய் இருக்கவும்.
2. குற்றமின்றி க்ரோதமற்று
எல்லா இகழ்ச்சியையும் பட்டு
மன்னித்தீர், சாந்த யேசுவே;
தேவ வீட்டுக்காய் அல்லாமல்
நீர் வேறெரிச்சலைக் காட்டாமல்
இருந்தீர் ஆட்டுக்குட்டியே;
நான் அந்தப் பக்தியாய்
மிகுந்த சாதுவாய் இருக்கட்டும்;
ஆ, யேசுவே, நான் உமக்கே
ஒப்பாக சாந்தமாகவும்.
3. சுய மேன்மையைத் தேடாமல்,
ஓர் மேட்டிமையை காட்டாமல்
மா தாழ்மையானீர், யேசுவே,
வேலைக்காரன் போல் திரிந்தீர்,
எல்லாரிலும் நீரே பணிந்தீர்,
மகா பெரிய கர்த்தரே;
ஆ! என்னை உம்முட
அடிகளில் வர படிப்பியும்;
என் யேசுவே, நான் உமக்கே
ஒப்பாகத் தாழ்மையாகவும்.
Comments
Post a Comment