மகா அருளின் ஜோதியை
103. Frankfort (388) 8, 8, 7, 8, 8, 7, 4, 12, 8.
"How
bright appears the..."
1. மகா அருளின் ஜோதியை
வீசும்
மெய்ச்சுடர் எத்தனை
ப்ரகாசமாய்
விளங்கும்!
தாவீதின்
மைந்தன், யேசுவே,
நீர்,
நீர், என் நேச நாதனே,
என்
பொக்கிஷம், என் பங்கும்;
முற்றும்
சுற்றும்
தயவாலும்
உண்மையாலும்
நீர்
நிறைந்தோர்,
மேன்மை
நாமமும் அடைந்தோர்.
2. என்
முத்தே, என் கிரீடமே,
உம்மோடு,
தேவ மைந்தனே,
நான்
ஐக்யமாக வேண்டும்;
உயர்ந்த
ராஜா, உமது
நற்சுவிசேஷம்
எனக்கு
அமிர்தம்
பாலும் தேனும்;
ஐயா,
மெய்யா,
தேவ
ரூபே, வாடாப் பூவே,
நீரே
யாவும்
ஜீவ
ஊற்றும் மெய் மன்னாவும்.
3. மகிழ்வேன்,
என் சிநேகிதர்
அல்பா
ஒமேகா என்பவர்,
என்
நேசர் ஆதி அந்தம்;
இனி
மோட்சானந்தத்திலே
நான்
அவரண்டை சேர்வேனே,
என் பாக்கியம் அநந்தம்;
ஆமென்,
ஆமென்!
வா,
ரட்சிப்பே, வா, வெற்றியே,
உனக்காக
வாஞ்சை ஆனேன், சேர்வாயாக.
Comments
Post a Comment