ஓய் எருசலேமியாரே


91. Sleepers, Wake, awake  - Herrnhut.     Irregular

"Wachet auf ruft uns die stimme"

1.         ஓய் எருசலேமியாரே,
            விழியுங்கள்; மெய் மார்க்கத்தாரே,
                        இப்பாதி ராத்திரியிலே
                        பத்தா வாறார்; வேகமாக
            எழுந்திருங்கள்; புத்தியாக
                        இருக்கும் கன்னிகள் எங்கே?
                        தீவர்த்திகளையே
                        எடுத்தெதிர்கொண்டே
                                    போம் நேரமாம்
            என்றிரவில் அலங்கத்தில்
            நிற்பாரின் கூக்குரல் உண்டாம்.

2.         சீயோனாகிய மனைவி
            சந்தோஷம் மனதில் பரவி
                        விழித்தெழுந்திருக்கிறாள்;
                        அவள்நேசர் மேன்மையோடும்
            சிநேகத்தோடும் தயவோடும்
                        வெளிப்படுகிறதினால்
                        கிலேசம் நீங்கிற்று;
                        ஆ ஸ்வாமி உமக்கு ஓசியன்னா;
            அடியாரும் கம்பீரிக்கும்
            சுதிக்குச் செல்வோமே, கர்த்தர்.

3.         சுரமண்டலங்களாலும்,
            நரர் சுரர்கள் நாவினாலும்
                        துதிக்கப்பட்டோர், தேவரீர்,
                        மோட்ச லோகம் மா சிறப்பு
            நீர் எங்களை வானோர்களுக்கு
                        ஒப்பானோராக மாற்றுவீர்;
                        அவ்வாழ்வைக் கண்டோர் ஆர்?
                        காதாலே கேட்டோர் ஆர்?
                                    நாங்கள் மகா
                        சந்தோஷமும் மகிழ்ச்சியும்
                        அடைகிறோம்; அல்லேலூயா.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு