11 October 2018

கர்த்தாவே எதுமட்டும்


92. Vulpius Havergal, - St. Giles.                             7s, 6s.

"How long, O Lord, our Saviour?"

1.         கர்த்தாவே, எதுமட்டும்
                        வராமல் இருப்பீர்?
            மெய்ப் பக்தரின் ஆயாசம்
                        நீர் நன்றாய் அறிவீர்.

2.         மா ஜோதி அருணோதயம்
                        என்னேரம் உதிக்கும்?
            பேர் வாழ்வின் சுபதினம்
                        எப்போது விடியும்?

3.         தாசர் அநேகர் தூங்கி
                        வீண் காலம் கழிப்பார்;
            நீர் தோன்ற, சிலர் மட்டும்
                        காத் தெதிர்ப் பார்க்கிறார்.

4.         வராமல் எதுமட்டும்,
                        மா மணவாளனே,
            தாமதிப்பீர்? அநேகர்
                        நம்மால் போனாரே!

5.         நல் மணவாட்டி தானும்
                        மெய்வாழ்வை மறந்தாள்;
            தன் நாயகர் இல்லாமல்
                        சந்தோஷம் ஆகின்றாள்.

6.         ஆ! தாசர் தங்கம் தூக்கம்
                        விட்டெழுந் தாவலாய்
            நீர் வர எதிர்நோக்கி
                        நிற்கட்டும் விழிப்பாய்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...