வாரும் யேசுநாதா வாரும்


93. Rousseau, Greenville                                                8s, 7s, 6l.

"Saviour hasten Thine appearing"

1.         வாரும், யேசுநாதா, வாரும்;
                        பக்தர் காத்து நிற்கிறார்;
            காடு போன்ற லோகில், பாரும்,
                        மோட்ச யாத்ரை செய்கிறார்;
                                    உம்மை காண
                        ஆவல் கொண்டு செல்கின்றார்.

2.         சர்வ சிஷ்டி ஏகமாக
                        காத்து தவிக்கின்றதே!
            மீட்புதோன்ற ஆவலாக
                        எதிர் நோக்குகின்றதே;
                                    நீர் வந்தாலோ
                        பூமி செழித்தோங்குமே.

3.         லோகமெங்கும் துன்பப்பட்ட
                        யூதர் வந்து கூடுவார்,
            காயமாகிக் குத்தப்பட்ட
                        திரு மேனி நோக்குவார்
                                    குணம் மாறி
                        உம்தன் தொண்டராகுவார்.

4.         வாரும் யேசுநாதா, வாரும்;
                        வானம் பூமி ஆளுவீர்;
            உம்மை நம்பினோரெல்லாரும்
                        வாழ்வு காணச் செய்குவீர்;
                                    பேரானந்தம்
                        தந்து பூரிப்பாக்குவீர்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு