06 October 2018

மகிழ் கர்த்தாவின் மந்தையே


86. Thanks giving: Church triumphant                    L.M.

"Nun freut euch, Gottes Kinder all"

1.         மகிழ், கர்த்தாவின் மந்தையே;
            மகா, கெம்பீரத்துடனே
            பரத்துக்குன் அதிபதி
            எழுந்து போனதால் துதி.

2.         விண்ணோர் குழாம் கெம்பீரமாய்
            கொண்டாடி, மா வணக்கமாய்
            பணிந்து, யேசு சுவாமிக்கு
            புகழ் செலுத்துகின்றது.

3.         ஆ, யேசு தேவ மைந்தனே,
            கர்த்தா, பர்த்தா, முதல்வரே!
            அடியார் நெஞ்சு உமக்கு
            என்றைக்கும் சொந்தமானது.

4.         விண்ணோரைப்போல் மண்ணோர்களே,
            நம் ஆண்டவரை என்றுமே
            அன்பாகக் கூடிப் பாடுங்கள்,
            அவரின் மேன்மை கூறுங்கள்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...