வாஞ்சைப்பட்ட யேசுவே


85. Wurtemberg: St. Albinus - Williston          (381)   7, 7, 7, 7, 4.

"Hail the day that sees Him rise"

1.         வாஞ்சைப்பட்ட யேசுவே,
            இந்தப் பூதலத்திலே
            கொஞ்ச நாள்தான் தங்கினீர்;
            மோட்ச வீட்டுக்கேகினீர்;
                        அல்லேலூயா!

2.         வான ஆசனத்திலே
            வீற்றிருந்து நித்தமே
            போற்றப்படும் தேவரீர்
            பூதலத்தை மறவீர்
                        அல்லேலூயா!

3.         திருக்கரம் குவித்து,
            திருக்காயம் காண்பித்து,
            திருவாய் மலர்ந்து, நீர்
            மாந்தர்க்காய் மன்றாடுவீர்
                        அல்லேலூயா!

4.         மண்ணை விட்டுப் பிரிந்தும்,
            வான லோகம் போயினும்,
            எங்கள் ஜெபம் கேளுமேன்
            எங்கள் நெஞ்சில் தங்குமேன்
                        அல்லேலூயா!

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே