பிரியமான இயேசுவே


100. Laudate Dominum, Attole paulum (Elberfield) 
8, 7, 8, 7, 8, 8, 7.

"Mein Herzens-Jesu, meine Lust"

1.         பிரியமான இயேசுவே,
                        என் நெஞ்சைத் தயவாக
            நீர் பூரிப்பாக்கி என்னிலே
                        மிகுந்த நிறைவாக
            தெய்வீக அன்பை ஊற்றியே
            பேரருள் தந்த உம்மையே
                        நான் துதி செய்வேனாக.

2.         என் நெஞ்சில் உம்மால் பற்றின
                        அன்பென்னும் தீ எரியும்;
            என் மனதும்மால் உத்தம
                        மகிழ்ச்சியை அறியும்;
            நான் உம்மை நோக்கும்போதெல்லாம்,
            என் துக்கம் உம்மிலே உண்டாம்
                        அருளினால் தெளியும்.

3.         நீர் என் வெளிச்சம்; உம்மால் நான்
            திறந்த முகமாக
                        பிதாவின் இன்ப நெஞ்சைத்தான்
            என் ஆறுதலுக்காக
            கண்ணோக்கும்போது தயவாய்
                        நீர் என்னை நீங்கா ஜோதியாய்
            ப்ரகாசிப்பிப்பீராக.

4.         நீர் மோட்சத்துக்கு போம் வழி;
                        உனக்குள்ளான யாரும்
            தப்பிப் போகார்; ஆ! இந்நெறி
                        விலகினோர் எல்லாரும்
            கெட்டழிந்து போவார்களே;
            வழியாம் ஸ்வாமி, உம்மிலே
                        நிலைக்க என்னைக் காரும்.

5.         நீர் சத்தியம்; நான் உம்மையே
                        தெரிந்து கொண்டிருப்பேன்;
            மாறாத மெய்ப் பொருள் நீரே!
                        வீண் மாய்கையை வெறுப்பேன்;
            உம்மாலே பாக்கியம் வரும்
            மெய்யே, என் நெஞ்சை என்றைக்கும்
                        நான் உமக்கே கொடுப்பேன்.

6.         நீர் ஜீவன்; என்னை நீர் நீரே
                        பலத்தால் இடைகட்டும்;
            திடன் இல்லா அந்நேரமே
                        என் நெஞ்சில் ஊக்கம் தாரும்;
            தெய்வீக ஜீவன் என்னிலே
            மென்மேலும் வளர்ந்தோங்கவே
                        நல்லாவியாலே காரும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு