11 October 2018

இராஜாதி ராஜாவே


99. Moscow, Fiat Lux,                                     6, 6, 4, 6, 6, 4, 6.

The almighty King

1.         ராஜாதி ராஜாவே,
            உம்மைத் துதிப்பதே
                        ஆனந்தமாய்;
            தேவகுமாரன் நீர்
            யாவையும் படைத்தீர்
                        எப்போதும் ஆளுவீர்
            விண், மண் எல்லாம்.

2.         அநாதி ஜோதியே,
            கார் இருள் நீக்கவே
                        விளங்கினீர்;
            நெஞ்சில் ப்ரகாசியும்,
            மருளைப் போக்கிடும்
                        அன்பும் சந்தோஷமும்
            தந்தருள்வீர்.

3.         வல்ல சகாயரே
            நீர் எங்கள் நெஞ்சிலே
                        தரித்திரும்;
            சாத்தானின் சோதனை
            எதிர்க்க வல்லமை
                        கொடுத்து எங்களைக்
            காத்தருளும்.

4.         அன்புள்ள யேசுவே,
            பூரணமாகவே
                        ரட்சை செய்யும்;
            இனிமேல் மோட்சத்தை
            அடைந்து இன்பத்தைப்
                        பெறவே எங்களைக்
            கடாட்சியும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...