03 October 2018

எல்லாம் படைத்த கர்த்தரே


63. Redhead 4; Mainzer                                             L.M

"Vom Himmel hoch da komm..."

1.         எல்லாம் படைத்த கர்த்தரே,
            பொல்லாத மாந்தர் மீதிரே
            பேரன்பு வைத்து தேவரீர்;
            ரட்சிப்புண்டாக்க ஜென்மித்தீர்.

2.         ஓர் பலவீன பாலனாய்,
            துணியில் சுற்றப்பட்டோராய்
            புல்லணை மீதில் கிடந்தீர்,
            மேன்மை அனைத்தும் மறந்தீர்.

3.         பூலோகத்தின் ப்ரஸ்தாபமும்
            சிங்காரஞ் செல்வம் மேன்மையும்
            அனைத்தும் மாயை என்று நீர்
            இவ்வாறு நன்றாய்க் காண்பித்தீர்.

4.         ஒன்றான நேச மைந்தனை
            அன்பாக ஈந்த தேவனை
            புகழ்ந்து போற்றும், மாந்தரே;
            ரட்சிப்பின் நாள் விடிந்ததே.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...